உலகின் அடி முட்டாள்கள் தமிழர்கள்?

நவம்பர் 18, 2008

உலகின் அடி முட்டாள்கள் தமிழர்கள்! என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறோம், தமிழன் என்பவன் ஒரு செம்மறி ஆடு, அது சுயமாக சிந்திக்காது, உணற்ச்சிகளுக்கு அடிமை, மந்த குணம் உடையவன், எல்லாவற்றிற்கும் மேலாக சுயந‌லவாதிகள், அடிமை மனப்பான்மை மற்றும் தாழ்வுமனப்பான்மை அதிகம் உடையவன்,

ஏன் இத்தனை சொற்வீச்சு, ஆம் இது தான் உண்மை,ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லீம்களிடமும், கிறிஸ்தவர்களிடமும்(வெள்ளைக்காரர்கள்)அடிமை, சுதந்திரம் வந்துவிட்டது என்று சொன்னமாத்திரத்தில் ஜாதிவெறி தலைவர்களிடம் அடிமை, அவர்கள் சொல்வதே வேதம் என்றாகிவிட்டது,

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தனர், இப்போது எங்கள் கைகளில் வலிமை இருக்கிறது அதனால் போராடுகிறோம்,

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமைகள். அவர்கள் எப்படி உரிமைக்கா போராடலாம், அவர்களுக்கு ஏது உரிமை இந்த நாட்டில்!

ஆதிக்க‌கார‌ர்க‌ள் பார்ப‌னிய‌ர்க‌ள் ம‌ட்டுமே என்று பார்ப‌னிய‌ர்க‌ளுக்கும் இந்து ம‌த‌த்திற்கும் எதிராக மிகத்துல்லியமாக திட்ட‌மிட்டு திராவிடகட்சிகளும், அன்னிய நாடுகளின் பணச்செழுப்பில் கொழுத்து கிடக்கும் கிறிஸ்தவ மிஷனறிகளும் பரப்பிவருகின்றன்.

ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்றும் ஆதிதிராவிடர்கள் என்றும் இந்திய அரசால் குறிப்பிடப்படுபவர்களிடையே இன்று நடக்கும் மோதல் எது சார்ந்தது? யார் ஆதிக்கம் செலுத்துவது, யார் அடிமையாக இருப்பது, மோதல்களின் உச்சகட்டம் சென்னை சட்டக்கல்லூரி வன்முறை.

மாணவர்கள் வருங்கால‌ இந்தியாவின் சிற்பிக‌ள், இங்கே மாண‌வ‌ர்க‌ள் வ‌ருங்கால‌ தாதாக்க‌ளாக‌ ஜாதீய‌ம் பேசும் த‌லைவ‌ர்க‌ளால் மாற்றப்படுகிறார்கள்.

இந்த சூழ்நிலையை சாதகமாக்கி சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார்கள் கிறிஸ்தவ மிஷனறிகள். ஆதிதிராவிடர்களை குறிவைத்து தீவிர ஜாதிவெறிக்கருத்துக்களும் இந்து மத எதிர்ப்பு கருத்துக்களும் ப‌ரப்பிவருகின்றன்.
அதே வேளையில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் பிராமண எதிர்ப்பும் இந்துமத எதிர்ப்பு கருத்துக்களும் திட்டமிட்டு மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌டுகிற‌து.

ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் அடிக்கும் இவ‌ர்க‌ள் ம‌க்க‌ளை மேலும் மேலும் ஜாதியால் மோத‌விட்டு த‌ருணம் பார்த்து தங்கள் பக்கம் அப்பாவி தமிழனை இழுத்துவிடுகிறார்கள். திடீர் ச‌ர்ச்சுக‌ள் உருவாக்கி அதை தாங்களே தீ வைத்து அமெரிக்காவே தலையிடுகிற நிலைஉருவாக்கி அந்த இடத்தில் அன்னிய பணத்தில் வானுயர சர்ச் கட்டி விடுவார்கள்.தலித்களுக்கு சால்வேசன் ஆர்மியும், தாழ்த்தப்பட்டவர்கழுக்கு மற்ற ஏதாவது ஒரு அமைப்பு.

தொடரும்…..

Advertisements

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஏழை இந்துக் குழந்தைகளைக் கடத்தும் தமிழக கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகள்

பிப்ரவரி 8, 2010

http://timesofindia.indiatimes.com/videos/news/Chennai-Child-trafficking-racket-exposed/videoshow/5492929.cms

கண்ணீர் அஞ்சலி

ஜனவரி 31, 2009
முத்துக்குமார் ஈழத்திற்க்காக தன்னுயிர் ஈந்து தமிழ் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். அன்பான தமிழ் பேசும் அன்னிய தேச தமிழர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், இனியும் தமிழ் நாட்டிலிருக்கும் அரசியல் வாதிகளின் சித்துவிழையாட்டுகளை நம்பி ஏமாந்துவிடாதீர்கள். இவர்கள் சுயனலவாதிகள். சுயநலத்திற்க்காக தமிழையும் தமிழ்மக்களையும் கூறுபோட்டுவிற்றுவிடுவார்கள். இவர்கள் இந்திய அரசிடமும், சிங்கள அரசிடமும் விலை போனவர்கள். தமிழை சோற்றுக்காகவும், சுகபோக வாழ்விற்க்கும்பயன்படுத்திவிட்டு எச்சில் இலை போல் தூக்கி எறிந்து விட்டார்கள். இன்று இந்தியம், தேசியம் பேசுகிறார்கள். இவர்கள்தான் காரணம் இன்று தமிழன் வீடிழந்து, மானமிழந்து நிற்ப்பதற்க்கு. பாவம் விடுதலைப்புலிகள் இவர்களின் அரசியல் சித்துவிழையாட்டிற்கு பலியாகி விட்டனர். இனிமேல் தமிழுக்கு ஒரு தலைவன் என்றால் அது மாவீரன் பிரபாகரனாக மட்டுமே இருக்க முடியும். தமிழ் நாட்டில் தமிழர்களோ, தமிழ்த்தலைவர்களோ இல்லை. தமிழினமே போராடு தன்காலில் நின்று. இந்திய தமிழனின்? ஊன்று கோல் வேண்டாம். முத்துக்குமார் சிவனடி எய்திவிட்டார். கண்ணீருடன்

கேள்விகள் தமிழ் இந்து.காம் ற்க்கு

திசெம்பர் 20, 2008

தமிழ் இந்து.காம் ற்க்கு என்னுடைய பணிவான வணக்கம்,

ஐயா,

என்னுடைய மனதில் எழும் கீழ்கண்ட கேழ்விகளுக்கு தயவு செய்து பதில் தரவேண்டும். இதன் மூலம் நானும் தெளிவுற்று என்னிடம் கேள்வி கேட்பவர்களும் தெளிவுறவேண்டும் என்பதே எனது அவ.

1, தமிழர்கள் என்பவர்கள் யார்?
2, அவர்கள் பின்பற்றிய வழிபாட்டு முறை என்ன?
3, தமிழகத்தில் எல்லாதரப்பு மக்களும் வழிபடும் தலங்களில் வேறுபாடின்றி அனுமதிக்கப்பட்டனரா?
4,பிராமணர்கள் என்றும் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடைத்தரகர் களாக செயல்படும் இவர்களின் பூர்வீக தாய்மொழி என்ன்?
5, பிராமணர்களின் தாய் மொழி சமஸ்க்கிருதம் என்றால் அவர்களின் பூர்வீகம் என்ன?
6,சமஸ்க்கிருதம், பிராமணர்கள் தங்கள் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தவும், தங்களை தற்காத்துக்கொள்ளவும் தாங்களே அறிவில் சிறந்தவர்களாக காட்டிக்கொள்ளவும் வேண்டியே தமிழ் வழிபாட்டு முறையில் அதை புகுத்தினார்களா?

வினாக்கள் தொடரும்…